வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 17 ஏப்ரல் 2023 (14:18 IST)

பஞ்சாப் ராணுவ முகாம் துப்பாக்கி சூடு சம்பவத்தை நடத்தியது ஒரு ராணுவ வீரரா? திடீர் திருப்பம்..!

பஞ்சாப் மாநிலத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ராணுவ முகாமில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு தொடர்புடையவர் ஒரு ராணுவ வீரர் என்ற தகவல் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பத்திண்டா என்ற ராணுவ முகாமில் ஏப்ரல் 12ஆம் தேதி நடந்த துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் தமிழக ராணுவ வீரர்கள் இருவர் உள்பட நான்கு பேர் உயிரிழந்தனர். 
 
இந்த துப்பாக்கி சூடு தொடர்பாக விசாரணை நடத்தி வரும் நிலையில் இந்த துப்பாக்கி சூட்டை நடத்தியவர் ஒரு ராணுவ வீரர் தான் என்ற செய்தியை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
இதே ராணுவ முகாமில் பணியாற்றிய தேசாய் மோகன் என்பவர்தான் ஆயுத கிடங்கில் இருந்து துப்பாக்கிகளை திருடி நால்வரையும் கொன்றது உயர்மட்ட விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. 
 
தன்னை உடல் ரீதியாக துன்புறுத்தியதால்தான் அவர்களை கொன்றதாக தேசாய் மோகன் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன
 
Edited by Mahendran