1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: வியாழன், 13 ஏப்ரல் 2023 (16:45 IST)

ராணுவ முகாமில் துப்பாக்கிச்சூடு...தமிழகத்தைச் சேர்ந்த 2 வீரர்கள் உட்பட 4 பேர் உயிரிழப்பு

பஞ்சாப் மாநிலம் பதிண்டா ராணுவ முகாமில் நஎற்று நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில்  தமிழகத்தைச் சேர்ந்த 2 வீரர்கள் உயிரிழந்ததாகத் தகவல் வெளியாகிறது.

பஞ்சாப் மாநிலம் பதிண்டா ராணுவ முகாமில் ஆயிரக்கணக்கான ராணுவ வீரர்கள் தங்கிப் பணியாற்றி வருகின்றனர்.

நேற்று அதிகாலையில், திடீரென்று துப்பாக்கிசூடு நடைபெற்றது. தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதாகச் சந்தேகம் எழுந்த நிலையில், சக வீரர்கள் உள்ளே சென்று பார்த்தபோது, சாகர் பின்னெ, சந்தோஷ் நகரல் மற்றும் கமலேஷ்(24), யோகேஷ்குமார்(24) ஆகிய  4 ராணுவ வீரர்கள் இறந்துகிடந்தனர்.

இவர்களில், கமலேஷ்(24), யோகேஷ்குமார்(24) ஆகியோர் முறையே சேலம் , தேனி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. மேலும் காவல் பணியில் இருந்த ஒருவர் தலையில் துப்பாக்கிச்ச்சூடு காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் பற்றி போலீஸில் ராணுவ அதிகாரிகள் கூறியுள்ளனர். இதுகுறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.