திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வெள்ளி, 14 அக்டோபர் 2022 (13:36 IST)

அரசியல் கோமாளி எடப்பாடி பழனிசாமி: ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி விமர்சனம்!

Pughazhendhi
எடப்பாடி பழனிசாமி அரசியல் கோமாளி என ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி விமர்சனம் செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி இன்று செய்தியாளர்களை சந்தித்தபோது எடப்பாடி பழனிச்சாமி அரசியல் கோமாளி என்று மாற்றி ஓபிஎஸ் மட்டுமே அதிமுகவை காப்பாற்ற முடியும் என்று தெரிவித்தார். 
 
சேலம் என்பது எடப்பாடி பழனிச்சாமி கோட்டை என்பது தற்போது ஓட்டையாக உள்ளது என்று கூறிய புகழேந்தி பசும்பொன் தேவர் நினைவிடத்துக்கு செல்ல பழனிச்சாமிக்கு எந்த தகுதியும் இல்லை என்றும் ஓபிஎஸ் அவர்களுக்கு மட்டுமே தகுதி உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்
 
மேலும் தென் தமிழகத்திற்கு செல்ல எடப்பாடிபழனிசாமி பயம் என்றும் பிரதமர் பாதுகாப்பில் அவர் ஒளிந்து கொண்டு பசும்பொன் செல்ல நினைக்கிறார் என்றும் எடப்பாடிபழனிசாமி ஒருபோதும் பொதுச்செயலாளராக முடியாது என்றும் தெரிவித்துள்ளார் 
 
ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தியின் இந்த விமர்சனம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
Edited by Siva