1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 7 மார்ச் 2022 (12:43 IST)

அதிமுகவின் தேவை ஒற்றை தலைமை... புகழேந்தி!

கர்நாடக அதிமுக முன்னாள் செயலாளர் புகழேந்தி, அதிமுகவுக்கு ஒற்றைத் தலைமை இல்லாததால் கட்சி தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது என கருத்து. 

 
உள்ளாட்சி தேர்தலில் அதிமுக பெருமளவில் வெல்லாத நிலையில் சசிக்கலாவை மீண்டும் அதிமுகவில் இணைக்க வேண்டும் என அதிமுகவில் உள்ளவர்களே தொடர்ந்து பேசத் தொடங்கியுள்ளனர். இந்நிலையில் அதிமுக பிரபலங்கள் சிலர் தொடர்ச்சியாக சென்று சசிக்கலாவை சந்தித்து வருவது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
இதனால் அதிமுக, அமமுக கட்சிகள் இணையுமா என்ற எதிர்பார்ப்பும் அக்கட்சியினருக்கு எழுந்துள்ளது. இந்நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் என்ற பெயரிலேயே சசிக்கலா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
 
அதில், கழக தொண்டர்களான உங்கள் ஏக்கங்களையும், எதிர்பார்ப்புகளையும் என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. அனைவரும் சேர்ந்து நமது இயக்கத்தை காத்திட வேண்டும் என்ற முழக்கத்தை எழுப்புகிறீர்கள். நீங்கள் என் மீது வைத்துள்ள அசைக்க முடியாத நம்பிக்கை வீண் போகாத வகையில் எனது வாழ்வை அரசியலுக்கு அர்ப்பணித்துள்ளேன் என தெரிவித்துள்ளார்.
 
இந்நிலையில் கர்நாடக அதிமுக முன்னாள் செயலாளர் புகழேந்தி, ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுகவுக்கு ஒற்றைத் தலைமை இல்லாததால் கட்சி தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது. ஒருங்கிணைப்பாளர் ஓ,பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகிய இருவரும் கட்சியில் இருந்து விலகி அதிமுக பொதுக்குழுவை கூட்ட வேண்டும்.
 
கட்சிக்கு சசிகலா தலைமையேற்க வேண்டும். இல்லையெனில் வேறு ஒருவரைக்கூட பொதுச் செயலாளராக பொதுக்குழு, செயற்குழு கூட்டத்தில் தேர்ந்தெடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.