1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 29 நவம்பர் 2019 (17:02 IST)

முதலுக்கே மோசம்... அமமுகவுக்கு ஆப்பு அடித்த புகழேந்தி: அடிப்போன தினகரன்

அமமுகவை பதிவு செய்வதற்கு தடை விதிக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக் கோரி புகழேந்தி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். 
 
சமீப காலமாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனுக்கு எதிராக அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் புகழேந்தி பேசி வந்த செய்திகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வந்தன. மேலும் கடந்த மாதம் முதல்வர் எடப்பாடியின் வீட்டிற்கே சென்று சந்தித்து பேசினார் புகழேந்தி. 
 
அப்பொழுதே புகழேந்தி அதிமுகவில் இணையப்போகிறார்? என பல கேள்விகள் எழுந்தன. ஆனால் அது நட்பு ரீதியான சந்திப்பு என புகழேந்தி விளக்கம் அளித்தார். இதனைத்தொடர்ந்து வெளிப்படையாகவே, அதிமுகவில் இணையப்போவதாக தெரிவித்துள்ளார். 
 
இது குறித்தி புகழேந்தி பேசியதாவது, தினகரன் கட்சி துவங்கி 2 வருடங்களாகியும் கட்சி என்கிற அங்கீகாரத்தை பெற முடியாமல் திணறி வருகிறார். நடந்து முடிந்த தேர்தலில் அமமுகவினரை சுயேச்சைகளாக போட்டியிட வைத்து தோல்வியடைய செய்தார். 
 
அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்கின்ற பெயரில் இயங்கி வரும் கம்பெனியை முழுவதுமாக கலைக்க வேண்டும் என தெரிவித்திருந்தார். இந்நிலையில் இப்போது அமமுகவை பதிவு செய்வதற்கு தடை விதிக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக் கோரி புகழேந்தி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். 
 
அந்த மனுவில், அமமுகவை பதிவு செய்வதற்கு தடை விதிக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக் கோரி புகழேந்தி உயர்நீதிமன்றத்தில் மனு பதிவு விண்ணப்பத்துடன் பிராமணப்பத்திரம் அளித்த 14 பேர் கட்சியில் இருந்து விலகியதால் பிரமாணப் பத்திரங்களின் அடிப்படையில் கட்சியை பதிவு செய்யக்கூடாது என குறிப்பிட்டுள்ளார்.