கேப்பே இல்லாமல் நடக்கும் வலிமை ஷூட்டிங்! பரபரப்பில் ஹெச் வினோத்!

Last Modified செவ்வாய், 26 ஜனவரி 2021 (09:26 IST)

வலிமை படத்தின் காட்சிகள் இப்போது சென்னையில் படமாக்கப்பட்டு வருகின்றன.

இந்த ஆண்டில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படம் அஜித்குமார் நடிப்பில் உருவாகி வரும் வலிமை. இப்படத்தை ஹெச்.வினோத் இயக்கி வருகிறார். இப்படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கிறார். இந்த படத்தின் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டு விட்ட நிலையில் அடுத்த கட்ட படப்பிடிப்புக்கு தென் ஆப்பிரிக்கா செல்ல உள்ளது படக்குழு.

இந்நிலையில் அதற்கு முன்னதாக அஜித் பைக்கில் இந்தியா முழுவதும் ஒரு பயணம் செல்ல விரும்பி இப்போது வடகிழக்கு மாநிலங்களில் சுற்றி வருகிறார். இந்நிலையில் வலிமை படத்தின் இயக்குனர் ஹெச் வினோத்தோ அஜித் இல்லாத காட்சிகளை மற்ற நடிகர்களை வைத்து சென்னையில் படமாக்கி வருகிறாராம்.

இங்கு சில காட்சிகளை எடுத்து முடித்துவிட்டு வெளிநாடுகளில் எடுக்கப்பட உள்ள இறுதி காட்சிகளுக்காக படக்குழு வெளிநாட்டுக்கு செல்ல உள்ளது.இதில் மேலும் படிக்கவும் :