புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 27 அக்டோபர் 2021 (11:27 IST)

உலகம் முழுவதும் அதிகம் தேடப்பட்ட ஸ்குவிட் கேம் ட்ரெஸ்!

பிரபல நெட்ப்ளிக்ஸ் தொடரான ஸ்குவிட் கேமில் வரும் உடைகளை மக்கள் அதிகமாக தேடுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சமீபத்தில் நெட்ப்ளிக்ஸில் வெளியாகி உலகம் முழுவதும் கவனத்தை ஈர்த்த வெப் சிரிஸ் ஸ்குவிட் கேம். இந்த தொடரில் வரும் கதாப்பாத்திரம் மற்றும் அவர்களது உடைகள் உலகம் முழுவதும் பிரபலமாகியுள்ளன. இந்தியாவில் தீபாவளி கொண்டாடப்படும் இந்த நாளில் மேற்கு நாடுகளில் ஹாலோவின் கொண்டாடப்படுகிறது.

இந்த ஹாலோவின் தினத்தில் சிறுவர்கள் பேய் போல அல்லது மேலும் சில மாறுவேடங்களை அணிந்து சுற்றுவது வழக்கம். இதற்காக மாறுவேட உடைகள் வாங்க ஆன்லைனில் பலர் தேடியுள்ளனர். இதில் பெரும்பாலானோர் ஸ்குவிட் கேமில் வரும் உடைகளை தேடியதாக தெரிய வந்துள்ளது. இந்த உடைகள் அதிகாரப்பூர்வமான வெளியீட்டில் கிடைக்காவிட்டாலும் கூட சில ஆன்லைன் தளங்களில் அடையாளம் தெரியாத நிறுவனங்கள் இவற்றை விற்பதாக கூறப்படுகிறது.