செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: சனி, 2 நவம்பர் 2019 (20:24 IST)

விஷ வண்டு தாக்கியதால் முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ உயிரிழப்பு

புதுவை மாநில அதிமுக மாநில செயலாரும், மணவெளி தொகுதியின் முன்னாள் எம்.எல்.வுமான  புருஷோத்தமன் விஷவண்டு தாக்கி உயிரிழந்ததாக வெளிவந்துள்ள செய்தி புதுவை அதிமுக தொண்டர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது
 
புதுவையின் அரியாங்குப்பம் மணவெளி பகுதியை சேர்ந்த முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ புருஷோத்தமன் அதிமுக தொண்டர்களின் பேராதரவை பெற்று புதுச்சேரி மாநில அதிமுக செயலாளராகவும், மணவெளி தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்து மக்களிடம் பெரும் செல்வாக்கு பெற்றுள்ளார். எம்.எல்.ஏவாக இல்லாத போதும் அவர் மக்களுக்காக பல உதவிகள் செய்ததாக அந்த பகுதி மக்கள் கூறுவதுண்டு
 
இந்த நிலையில், இவர் விழுப்புரம் மாவட்டம் ராதாபுரம் பகுதியில் தனக்கு சொந்தமான விவசாய நிலத்துக்கு சென்றார். அப்போது அவரை எதிர்பாராதவிதமாக விஷவண்டு கடித்ததாக தெரிகிறது. இதையடுத்து மயங்கி விழந்த அவரை அருகில் இருந்த முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை செய்த போதிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்
 
முன்னாள் எம்.எல்.ஏ புருஷோத்தமன் மறைவிற்கு அதிமுக பிரமுகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மணவெளி பகுதி மக்களுக்கு இதுவொரு பெரும் இழப்பாக கருதப்படுகிறது