வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 2 நவம்பர் 2019 (15:17 IST)

அரசியல் ஆகிறதா விஜய் சேதுபதி விளம்பரம்?

நடிகர் விஜய் சேதுபதி தற்போது நடித்துள்ள ஆன்லைன் வர்த்தகம் தொடர்பான விளம்பரம் குறித்து அமைச்சர் ஜெயகுமார் பதிலளித்துள்ளார். 
 
கோலிவுட் முன்னணி நடிகர்களுள் ஒருவரான விஜய் சேதுபதி சமீபத்தில் ஆன்லைன் வர்த்தகம் தொடர்பான மண்டி என்ற செயலியின் விளம்பரத்தில் நடித்துள்ளார். இந்த விளம்பரத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ளதற்கு சில்லறை வணிகர்கள் சங்கம் எதிர்ப்பு தெரிவித்திருந்தது. 
 
இந்நிலையில் இது குறித்து அதிமுக அமைச்சர் ஜெயகுமாரிடம் கேள்வி எழுப்பட்டது. இதற்கு அவர் பின்வருமாறு பதில் அளித்தார், ஆன்லைன் வர்த்தகத்தால் பாதிப்பு ஏற்படுமானால் மத்திய அரசுக்கு அது தொடர்பாக வலியுறுத்த தமிழக அரசு தயராக உள்ளது.  சிறு வியாபாரிகளை பாதிக்காத வகையில் அரசு எப்போதும் நடவடிக்கை எடுக்கும் என கூறினார்.