தடுப்புச்சுவர் அமைக்க வேண்டி பொது மக்கள் சாலை மறியல் போரட்டம்!
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அம்மன் நகர் ஐயப்பன் கோவில் அருகில் உள்ள பைபாஸ் ரோடு சர்வீஸ் சாலையில் தடுப்பு சுவர் இல்லாததால் மண் அரிப்பு ஏற்பட்டு பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் வாகன விபத்தில் அடிக்கடி பொதுமக்கள் சிக்கிக் கொள்கின்றனர்
இதனை தடுக்கும் பொருட்டு தடுப்புச்சுவர் அமைக்க வேண்டி ஒரு வருட காலமாக பலமுறை ஒன்றிய அரசு கட்டுப்பாட்டில் உள்ள இந்திய தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையத்திற்கு மனு அளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாததால் உடனடியாக பைபாஸ் சர்வீஸ் சாலையில் தடுப்புச் சுவர் அமைக்க கோரி
குமாரபாளையம் நகர மன்ற தலைவர் மற்றும் துணைத் தலைவர் நகர மன்ற உறுப்பினர்கள் பொதுமக்கள் அம்மன் நகர் ஐயப்பன் கோவில் அருகில் உள்ள பைபாஸ் சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.