1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Mahendran
Last Modified: வியாழன், 12 அக்டோபர் 2023 (17:19 IST)

கிரிக்கெட் ரசிகர்களுக்கு இனி இலவச குடிநீர்.. தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அறிவிப்பு..!

chepauk
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை காண வரும் ரசிகர்களுக்கு இனி இலவசமாக குடிநீர் பாட்டில் வழங்கப்படும் என தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையே கடந்த எட்டாம் தேதி உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இதனை அடுத்து 13-ஆம் தேதி வங்கதேசம் மற்றும் நியூசிலாந்து, 18ஆம் தேதி நியூசிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான், 23ஆம் தேதி ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான், 27ஆம் தேதி பாகிஸ்தான் மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய நான்கு போட்டிகள் நடைபெற உள்ளன.

 இந்த நிலையில் இனி வரும் போட்டிகளில் சென்னை சேப்பாக்கம் மைதானத்திற்கு வரும் கிரிக்கெட் ரசிகர்களுக்கு இலவசமாக குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்படும் என தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது. இதனால் கிரிக்கெட் ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ஏற்கனவே கிரிக்கெட் போட்டியை பார்க்க வருபவர்களுக்கு மெட்ரோ ரயிலில் இலவச பயணம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது  என்பது குறிப்பிடத்தக்கது

Edited by Mahendran