டெங்கு பாதிப்பை தடுக்க பொது சுகாதாரத்துறை நடவடிக்கை !
தமிழகத்தில் தொடர்ந்து அதிகரிக்கும் டெங்கு பாதிப்பு இந்த ஆண்டில் இதுவரை 4,266 பேருக்கு டெங்கு பாதிப்பு என சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
செப்டம்பர் மாதத்தில் மட்டும் 572 பேருக்கு டெங்கு பாதிப்பு எனவும், ஆகஸ்ட் மாதத்தில் 481 பேர் டெங்குவால் பாதிப்பு எனவும் கூறப்பட்டது. குழந்தைகளுக்கு கொசு வலையை பயன்படுத்தி, சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக்கொள்ள பொது சுகாதாரத்துறை அறிவுறுத்து உள்ளது. மேலும் நோய் தடுப்பு பணிகளில் சுகாதாரத்துறை தீவிரம் காட்டி வருகிறது.
தமிழகத்தில் கடந்த வாரத்தில் மட்டும் 168 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது எனவும், சென்னை உட்பட வட மாவட்டங்களில் பாதிப்பு அதிகமாக உள்ளதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
நன்னீரில் உற்பத்தியாகும் ஏடிஸ் கொசுக்களால் பரவும் டெங்கு காய்ச்சல் ஆண்டு முழுவதுமே கண்டறியப்படும் நோய்தான் என்றாலும், மழைக்காலங்களில் கூடுதலாக பாதிப்பு ஏற்படுகிறது. எனவே தான் வீடுகளைச் சுற்றி மழைநீர் தேங்காமல் கவனமுடன் இருக்கும்படியும் பொது சுகாதாரத்துறை அறிவுறுத்துகிறது.
தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்குவதை தடுப்பது உள்ளாட்சித் துறையின் பணி. இருந்தாலும் மழைக்காலங்களில் ஏற்படும் பாதிப்புகளை தடுக்க மக்கள் நல்வாழ்வுத்துறை, ஊரக உள்ளாட்சித் துறை, நகர்ப்புற உள்ளாட்சித் துறை ஆகிய துறைகளுடன் இணைந்து கூட்டங்கள் நடத்தி அதிகாரிகளுடன் ஆய்வு செய்ய தமிழக பொது சுகாதாரத்துறை உத்தரவுகள் பிறப்பித்துள்ளது.
Edited by Sasikala