1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Public exam to school students may postponed

பள்ளி மாணவர்களுக்கான பொதுத் தேர்வு தள்ளிவைக்கப்படுமா?

பள்ளி மாணவர்கள்
கொரோனா பொதுமுடக்கத்துக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில் பருவமழை காரணமாக மறுபடியும் அடிக்கடி விடுமுறை அளிக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பொதுமுடக்கத்துக்குப் பிறகு 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செப்டம்பர் மாதத்தில் இருந்தும் 1 முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நவம்பர் 1 ஆம் தேதியில் இருந்தும் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் இப்போது பருவமழைக் காரணமாக விடுப்பு அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் 10 முதல் 12  ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அடுத்த ஆண்டு ஏப்ரலில் பொதுத் தேர்வு நடத்தாமல் மே மாதத்தில் நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன்மூலம் மாணவர்கள் தேர்வுக்கு தயாராக கூடுதல் அவகாசம் கிடைக்கும் என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.