வெள்ளி, 7 மார்ச் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 31 மே 2022 (16:05 IST)

தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு- வானிலை மையம்

தமிழகத்தில் தென்மெற்கு பருவமழை இந்த ஆண்டு முன் கூட்டியே தொடங்கும் என  வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில் தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவை, நீலகிரி, திருப்பூர், திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல் கரூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.