1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : செவ்வாய், 31 மே 2022 (19:52 IST)

தமிழகத்தின் ஜிஎஸ்டி நிலுவை தொகையை விடுவித்தது மத்திய அரசு!

GST
தமிழகத்திற்கு மத்திய அரசு தர வேண்டிய ஜிஎஸ்டி நிலுவைத் தொகை முழுவதையும் விடுவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன 
 
தமிழகத்தில் கடந்த ஜனவரி மாதத்திற்கு பின்னர் ஜிஎஸ்டி நிலுவைத் தொகை விடுவிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டை தமிழக அரசும் தமிழக நிதி அமைச்சரும் கூறி இருந்தனர்.
 
இந்த நிலையில் தமிழகத்திற்கு ரூபாய் 9602 கோடி ஜிஎஸ்டி நிலுவைத் தொகையை மத்திய அரசு விடுவித்துள்ளது. மே 31-ஆம் தேதி வரை தமிழகம் உள்பட அனைத்து மாநிலங்களுக்கும் வழங்க வேண்டிய ஜிஎஸ்டி தொகை இழப்பீடு வழங்கப்பட்டு விட்டதாகவும் மத்திய அரசு விடுவித்த ஜிஎஸ்டி நிலுவைத் தொகை மொத்த மதிப்பு 86,902 கோடி என்றும் கூறப்படுகிறது.
 
 மத்திய அரசு தமிழகத்திற்கு ஜிஎஸ்டி நிலுவை தொகையை கொடுத்து விட்டதை அடுத்து நலத்திட்டங்களில் பணிகள் விறுவிறுப்பாக நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது