புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Updated : செவ்வாய், 11 ஆகஸ்ட் 2020 (20:39 IST)

முழுக்க முழுக்க சென்னையில் தயாராகும் ‘பொன்னியின் செல்வன்’: ஐடியா கொடுத்த ஆர்ட் டைரக்டர்

பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கிவரும் ’பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் கிட்டத்தட்ட இந்திய திரையுலக முன்னணி நட்சத்திரங்கள் பலர் நடித்து வருகின்றனர் என்பது தெரிந்ததே. விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்தின் முதல் இரண்டு கட்ட படப்பிடிப்பு தாய்லாந்து நாட்டிலும் அதன் பின்னர் இலங்கையில் அடுத்த கட்ட படப்பிடிப்பும் நடந்தது 
 
இந்த நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தற்போது படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த படத்தின் பெரும்பாலான காட்சிகள் தாய்லாந்தில் உள்ள அடர்ந்த காட்டில் எடுக்க திட்டமிடப்பட்டுள்ளதால், மீண்டும் பொன்னியின் செல்வன் படக்குழு எப்போது தாய்லாந்து செல்லும் என்பது தெரியாத நிலையில் உள்ளது 
 
இந்த நிலையில் பொன்னர் சங்கர் திரைப்படத்தில் ஆர்ட் டைரக்டராக பணிபுரிந்த தோட்டாதரணி அவர்கள் பொன்னியின் செல்வன் இயக்குனர் மணிரத்தினத்தின் ஒரு ஐடியா கூறியுள்ளார். பொன்னர் சங்கர் எடுத்த லொகேஷன் பொன்னியின் செல்வன் திரைப்படத்துக்கும் சரியாக இருக்கும் என்று அவர் கூறினார். இதனை ஏற்றுக்கொண்ட மணிரத்னம் அந்த பகுதியில் படப்பிடிப்பு நடத்த உள்ளதாகவும் அந்த பகுதி தான் சென்னை ஐஐடி என்றும் கூறப்படுகிறது 
 
எனவே பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் கிட்டத்தட்ட முக்கால்வாசி பகுதி சென்னையிலேயே எடுக்கப்பட இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது