பரந்தூர் செல்லும் விஜய்க்கு கட்டுப்பாடுகள் எதுவும் இல்லை: காஞ்சிபுரம் எஸ்பி தகவல்..!
பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்க மூன்று வருடங்களாக அந்த பகுதியில் உள்ள மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபடும் மக்களை தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் சந்திக்க இருப்பதாகவும், அவருக்கு காவல்துறை அனுமதி அளித்துள்ளதாகவும் செய்திகள் வெளிவந்தன.
ஆனால், அதே நேரத்தில் விஜய் பரந்தூருக்கு செல்லும்போது சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதாக சமூக வலைதளங்கள் மற்றும் ஊடகங்களில் செய்திகள் வெளிவந்தன. இதுகுறித்து காஞ்சிபுரம் எஸ்.பி. எஸ்.பி.கே. சண்முகம் விளக்கம் அளித்தார். அவர் கூறியதாவது:
"தேவையில்லாத வெளிநபர்கள் அதிகமாக வராமல் பார்த்துக் கொள்ளுமாறு, குறிப்பிட்ட நேரத்திற்குள் சந்திப்பை முடிக்குமாறும் அறிவித்துள்ளோம். அதைவிட்டு, விஜய்க்கு வேறு எந்த கட்டுப்பாடுகளோ அல்லது நிபந்தனைகளோ விதிக்கப்படவில்லை," என்று அவர் கூறினார்.
இதனைத் தொடர்ந்து, தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய், விமான நிலைய எதிர்ப்பு குழு போராளிகளை சந்தித்து பேச உள்ளார். இந்த நிகழ்வில் காஞ்சிபுரம் மாவட்டத்தின் தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாகிகள் மட்டுமே கலந்து கொள்வார்கள் என்று அந்த கட்சியின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
Edited by Siva