1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. admk protest postponed to Dec 16

அ.தி.மு.க. சார்பில் நாளை நடைபெற இருந்த ஆர்ப்பாட்டம் தள்ளிவைப்பு!

ADMK
அதிமுக சார்பில் நாளை நடைபெற இருந்த ஆர்ப்பாட்டம் டிசம்பர் 16ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
திமுகவின் 18 மாத ஆட்சி காலத்தில் சொத்துவரி, மின்கட்டணம், பால்விலை உயர்வு உள்பட பல்வேறு சீர்கேடுகள் உள்ளதை அனைத்து கட்டணங்களையும் திரும்ப பெற வலியுறுத்தி டிசம்பர் 9ஆம் தேதி அதாவது நாளை தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது
 
 இந்த நிலையில் நாளை புயல் உருவாகி இருப்பதாகவும் அதன் காரணமாக தமிழகத்தின் பல மாவட்டங்களில் மழை பெய்யும் என்பதால் நாளைய ஆர்ப்பாட்டம் டிசம்பர் 16-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக அதிமுக தலைமைக் கழகம் தெரிவித்துள்ளது
 
இதனையடுத்து நாளை நடைபெற இருந்த ஆர்ப்பாட்டம் டிசம்பர் 16ஆம் தேதி நடைபெறும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது
 
Edited by Siva
About Writer
Siva
அடுத்த கட்டுரையில்
சென்னை கோபாலபுரத்தில் தனியார் மருத்துவமனையில் தீ விபத்து: பெரும் பரபரப்பு