1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 9 ஏப்ரல் 2023 (10:54 IST)

தமிழகத்தில் மீண்டும் சொத்துவரி 6% உயர்வு.. பொதுமக்கள் அதிருப்தி..!

TN assembly
தமிழகத்தில் ஏற்கனவே கடந்த ஆண்டு சொத்து வரி மிக அதிக அளவில் உயர்த்தப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் 6% சொத்து வரி உயர்த்தப்படும் என்று கூறப்பட்டிருப்பது பொதுமக்கள் மத்தியில் பேரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. 
 
தமிழகத்தில் சொத்து வரியை 1998 ஆம் ஆண்டுக்கு பிறகு உயர்த்தப்படவில்லை என்பதை அடுத்து கடந்த ஆண்டு சொத்துவரி உயர்த்தப்பட்டது என்பதும் இந்த உயர்வு 25 முதல் 100 சதவீதம் வரை இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் 6% சொத்து வரி மீண்டும் உயர்கிறது என்ற அறிவிப்பு பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டு சொத்து வரி உயர்த்தப்படும் போதே ஒவ்வொரு வருடமும் சொத்து வரி உயர்த்தப்படும் என்று அறிவிக்கப்பட்டதை அடுத்து இந்த ஆண்டும் சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் வீட்டு உரிமையாளர்கள் மட்டுமின்றி வாடகைதாரர்களும் பாதிக்கப்படுவார்கள் என்று கூறப்படுகிறது. 
 
ஏற்கனவே மின்கட்டணம் உள்பட பல்வேறு கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ள நிலையில் தற்போது மீண்டும் சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
 
Edited by Siva