திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 9 ஏப்ரல் 2023 (10:47 IST)

தமிழகத்தில் பொது இடங்களில் முகக்கவசம் கட்டாயமா? சுகாதாரத் துறை அமைச்சர் தகவல்

தமிழகத்தின் அண்டை மாநிலங்களான கேரளா மற்றும் புதுச்சேரியில் பொது இடங்களில் முகக்கவசம் கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழகத்தில் பொது இடங்களில் முக கவசம் கட்டாயம் என அறிவிக்கப்பட வேண்டிய அவசியம் இல்லை என சுகாதாரத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் அவர்கள் தெரிவித்துள்ளார். 
 
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைவாகவே உள்ளது என்றும் ஒருவேளை தொற்று ஏற்பட்டாலும் ஒரு வாரத்தில் குணமடைந்து விடலாம் என்றும் எனவே கொரோனா வைரஸ் பரவுவது குறித்து மக்கள் அச்சப்பட வேண்டாம் என்றும் செய்தியாளர்களுடன் அவர் தெரிவித்தார். 
 
ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் தமிழகத்தில் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் முகக்கவசம் கட்டாயமாகப்பட்டுள்ளது என்றாலும் பொது இடங்களில் முகக்கவசத்தை கட்டாயமாக்கும் அவசியம் தற்போது இல்லை என்றும் ஒருவேளை தேவைப்பட்டால் கட்டாயமாக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
 
Edited by Siva