வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வியாழன், 6 ஏப்ரல் 2023 (21:37 IST)

தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 273 பேருக்கு கொரோனா பாதிப்பு..!

தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 273 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
 
கடந்த 24 மணி நேரத்தில் சென்னையில் 98 பேர்களும், செங்கல்பட்டில் 28 பேர்களும், கோவையில் 19 பேர்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
 
இன்று ஒரே நாளில் தமிழகம் முழுவதும் 3855 பேர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. 
 
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 123 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பினர்.
 
இன்று தமிழகத்தில் கொரொனாவால் பலி எண்ணிக்கை எதுவும் இல்லை. இதுவரை கொரோனாவுக்கு 38050 பேர் உயிரிழந்துள்ளனர்.
 
தமிழகத்தில் தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 1366 ஆகும்.
 
Edited by Siva