1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Professor Murugan arrested in Nirmala devi case

நிர்மலா தேவி விவகாரம்: தலைமறைவாக இருந்த பேராசிரியர் முருகன் கைது

நிர்மலா தேவி
பேரசிரியை நிர்மலா தேவிக்கு உதவியாக இருந்த உதவிப் பேராசிரியர் முருகன்  தலைமறைவாக இருந்து வந்த நிலையில் அவர் போலீஸாரால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.
கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்து செல்ல முயற்சித்த அருப்புக்கோட்டை கல்லூரி ஒன்றின் கணித பேராசிரியை நிர்மலாதேவி வழக்கை கவர்னர் நியமனம் செய்த சந்தானம் தலைமையிலான குழுவும், சிபிசிஐடியும் தனித்தனியே விசாரணை செய்து வருகின்றனர்.
 
இந்நிலையில் இந்த விவகாரத்தில் பேராசிரியை நிர்மலாதேவிக்க்கு துணை பேராசிரியர் முருகன் என்பவரும், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி என்பவரும் உதவியதாக சிபிசிஐடி போலீசார் சந்தேகம் அடைந்தனர். இந்நிலையில் முருகனும், கருப்பசாமியும் திடீரென தலைமறைவானதால் போலீசாரின் சந்தேகம் உறுதியானது.
 
இதனையடுத்து சிபிசிஐடி போலீஸார் பேராசிரியர் முருகன் மற்றும் ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமியை பிடிக்க 4 தனிப்படைகள் அமைத்தனர்.
இந்நிலையில் தலைமறைவான முருகன் மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்திற்கு வருகைப் பதிவேட்டில் கையெழுத்திட வந்தபோது, அவரை சிபிசிஐடி போலீஸார் அதிரடியாக கைது செய்துள்ளனர். மேலும் தலைமறைவாக உள்ள கருப்பசாமியை பிடிக்க, சிபிசிஐடி போலீஸார், தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.
அடுத்த கட்டுரையில்
உலக போருக்கு தயாராகும் ரஷ்யர்கள்?