லாட்ஜில் பிணமாக மீட்கப்பட்ட இளம் நர்ஸ்: மருத்துவர் செய்த கொடூர செயல்!!
லக்னோவில் லாட்ஜில் நர்ஸ் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
லக்னோ அம்பேத்கர் நகரை சேந்தவர் சமந்தா(24). வெவிலியரான இவர் சுகாதார மையத்தில் பணிபுரிந்து வந்தார். சமந்தாவிற்கு ராஜேஷ் என்ற மருத்துவரிடம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் இவர்களது பழக்கம் காதலாக மாறியது. இருவரும் ஒருவரை ஒருவர் தீவிரமாக காதலித்து வந்தனர்.
இந்நிலையில் இருவரும் ஒரு ஹோட்டலில் ரூம் எடுத்து தங்கியுள்ளனர். அங்கு அவர்கள் இருவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் கடும் கோபமடைந்த ராஜேஷ் சமந்தாவை கொலை செய்துவிட்டு அங்கிருந்து ஓடியுள்ளார்.
நீண்ட நேரமாகியும் கதவு திறக்கப்படாததால், ஹோட்டல் நிர்வாகத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, சமந்தா கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. அங்கு ஒரு கடிதம் இருந்தது. அதில் நான் ராஜேஷ், சமந்தாவை உயிருக்கு உயிராக காதலித்தேன். ஆனால் அவள் அப்படி இல்லை. எல்லா விஷயத்திற்கும் சண்டை போட்டாள். ஆகவே தான் அவளை கொலை செய்தேன். நானும் தற்கொலை செய்து கொள்ளப்போகிறேன் என குறிப்பிடப்பட்டிருந்தது.
சமந்தாவின் உடலை மீட்ட போலீஸார் அவரின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் தற்கொலை செய்து கொள்வதாக கூறிய ராஜேசை தீவிரமாக தேடி வருகின்றனர்.