தனியாருக்கு அனுமதிக்கப்பட்ட மின்சார பராமரிப்பு பணி உத்தரவு ரத்து!
தமிழகத்தில் மின்சார வாரியத்தில் பராமரிப்பு பணிகளை நிர்வகிக்கும் பொறுப்பை தனியார் நிறுவன ஒப்பந்ததாரகளுக்கு வழங்கப்படும் என்ற அறிவிப்பு வெளியாகிய நிலையில், இந்த அறிவிப்புக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.
இந்த நிலையில் தமிழக மின்வாரியம் ஒருபோதும் தனியார் மயமாக்கப்படாது எனவும் தடையில்லா மின்சாரம் வழங்கவே இந்த பணிகளை தனியாருக்கு வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தங்கமணி விளக்கமளித்து இருந்தார்
இந்த நிலையில் தனியாருக்கு அனுமதிக்கப்பட்ட மின்சார பராமரிப்பு பணி உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மின்வாரிய ஊழியர்கள் தொடர் போராட்டம் நடத்தியதை அடுத்து தற்போது தமிழக அரசு அந்த உத்தரவை ரத்து செய்துள்ளது
தனியாருக்கு அனுமதிக்கப்பட்ட மின்சார பராமரிப்பு பணி உத்தரவு ரத்து என்றும், சென்னையில் 2 துணை மின் நிலையங்கள் உட்பட 5 நிலையங்களின் பராமரிப்பு பணிகளை தனியாருக்கு விட்ட உத்தரவு ரத்து என்றும் அதிரடியாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது. இன்று மின்சார ஊழியர்கள் போராட்டம் நடத்திய நிலையில், மின்சார வாரியம் இந்த முடிவை எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது