1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 29 ஜூன் 2021 (22:04 IST)

முதல்வரை சந்திக்கும் தனியார் பள்ளி சங்கத்தின் நிர்வாகிகள்!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் குறைந்த நிலையில் அரசு பள்ளிகளிலும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர் சேர்க்கை நடைபெறலாம் என அரசு அறிவித்துள்ளது 
 
ஆனால் தனியார் பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க இன்னும் அனுமதிக்கப்படவில்லை. இந்த நிலையில் முதலமைச்சரை தனியார் பள்ளிகள் சங்கத்தின் நிர்வாகிகள் சந்திக்கின்றனர். ஜூலை 6ஆம் தேதி தனியார் பள்ளி சங்கத்தின் நிர்வாகிகள் முதல்வர் முக ஸ்டாலின் அவர்களை சந்திக்கின்றனர் என்றும் இந்த சந்திப்பின் போது தமிழ்நாட்டில் தனியார் பள்ளிகளை திறக்க முதலமைச்சரிடம் அனுமதி பெறலாம் என்றும் தகவல் வெளிவந்துள்ளது
 
பீகார், தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் பள்ளிகள் திறக்க உள்ள நிலையில் தமிழ்நாட்டிலும் பள்ளிகளை திறக்க கோரிக்கை விடுக்கலாம் என்று கூறப்படுகிறது. மேலும் தனியார் பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க அனுமதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்போவதாகவும் தெரிகிறது