சென்னை தனியார் நிறுவனத்துக்கு ரூ.566 கோடி அபராதம்: அமலாக்கத்துறை அதிரடி..!
சென்னையில் இயங்கி வரும் தனியார் நிறுவனத்திற்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் ரூ. 556 கோடி அபராதம் விதித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையைச் சேர்ந்த ஜிஐ ரீடெயில் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனம் முறைகேடாக பங்குகளை விற்பனை செய்ததாகவும், அதன் மூலம் ரூ. 195 கோடி மறைத்து வைக்கப்பட்டதாகவும், அந்த தொகையை ஐக்கிய அரபு நாடுகளில் இந்தியர்களால் நிர்வகிக்கப்படும் நிறுவனத்தில் மறைமுகமாக முதலீடு செய்திருப்பதாகவும் ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இந்த தகவலின் அடிப்படையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியபோது, அந்த தகவல் உண்மை என கண்டறியப்பட்டது. இதனைத் தொடர்ந்து, அந்நிய செலவாணி மேலாண்மை சட்டத்தின் கீழ், நிறுவனத்துக்குச் சொந்தமான ரூ1. 95 கோடி மதிப்பிலான சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
அதனை அரசுடைமையாக மாற்றவும் உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், இந்த நிறுவனத்திற்கு ரூ. 556.5 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறையின் செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Edited by Siva