சென்னை திரும்பும் பயணிகள்… தாம்பரம் – காட்டாங்குளத்தூர் இடையே சிறப்பு மின்சார ரயில்கள் இயக்கம்!
தீபாவளிக்கு சொந்த ஊர் சென்றவர்கள் தற்போது மீண்டும் சென்னைக்கு திரும்பி கொண்டிருக்கும் நிலையில் அந்த பயணிகளின் வசதிக்காக தாம்பரம் - காட்டாங்குளத்தூர் இடையே நாளை சிறப்பு மின்சார ரயில்கள் இயக்கப்படும் என்று ரயில்வே துறை அறிவித்துள்ளது.
தீபாவளி பண்டிகை கொண்டாட சுமார் 10 லட்சம் பேர் சென்னையை விட்டு வெளியேறிய நிலையில் இன்றும் நாளையும் சென்னைக்கு மீண்டும் வர இருக்கின்றனர். இந்த நிலையில் காட்டாங்குளத்தூரில் இருந்து நாளை அதாவது நவம்பர் நான்காம் தேதி அதிகாலை 4, 4.30, 5, 5.45, 6.20 ஆகிய நேரங்களில் தாம்பரத்திற்கு சிறப்பு மின்சார ரயில்கள் இயக்கப்படுகிறது.
இந்த ரயில் பொத்தேரி, கூடுவாஞ்சேரி, ஊரப்பாக்கம், வண்டலூர் ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும். அதே போல, தாம்பரத்தில் இருந்து அதிகாலை 5.05 மணி மற்றும் 5.40 மணிக்கு காட்டாங்குளத்தூருக்கு 2 சிறப்பு மின்சார ரயில்கள் இயக்கப்படும் என ரயில்வே துறை தெரிவித்துள்ளது.
Edited by Siva