செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : திங்கள், 20 ஜூன் 2022 (15:25 IST)

10, 12 வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற சிறைக்கைதிகள்!

jail
பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று அடுத்தடுத்து வெளியான நிலையில் இந்த தேர்வில் தேர்ச்சி அடைந்த மாணவர்கள் மற்றும் மாணவிகளையும் விவரங்கள் மாவட்ட வாரியாக ஊடகங்களில் செய்தியாக வெளிவந்து கொண்டிருக்கின்றன 
 
இந்த நிலையில் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய சிறைக் கைதிகளும் பலர் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்ற தகவல் வெளியாகியுள்ளன. 
 
தமிழகம் முழுவதிலும் உள்ள சிறைகளில் இருந்து பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை 242 சிறைக்கைதிகள் எழுதிய நிலையில் அவர்களில் 133 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர் 
 
அதேபோல் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வை 75 சிறைக்கைதிகள் எழுதிய நிலையில் அவர்களில் 71 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது