புதுச்சேரியிலும் வெளியான 10, 12ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள்!
தமிழகத்தில் இன்று காலை 10 மணிக்கு பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளும் அதன் பின் ஒரு சில மணி நேரத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளும் வெளியானது என்பதை பார்த்தோம்
பள்ளி மாணவர்கள் இணையதளங்கள் மூலம் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளை பார்த்து மதிப்பெண்களையும் தெரிந்து கொண்டனர்
மேலும் இன்று முதல் தாற்காலிக மதிப்பெண் இணையதளத்தில் டவுன்லோட் செய்து கொள்ளலாம் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் தமிழகத்தை அடுத்து இன்று புதுச்சேரியிலும் பத்தாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி சற்று முன் தேர்தல் முடிவுகளை வெளியிட்ட நிலையில் மாணவர்கள் தேர்தல் முடிவுகளை பார்த்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது