1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வெள்ளி, 24 டிசம்பர் 2021 (07:14 IST)

ஆயுள் தண்டனை கைதிகளை முன்கூட்டியே விடுதலை: முதல்வர் அமைத்த 6 பேர் கொண்ட குழு!

தமிழக சிறையில் இருக்கும் ஆயுள் தண்டனை கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்ய முதலமைச்சர் முக ஸ்டாலின் 6 பேர் கொண்ட குழு ஒன்றை அமைத்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 
நன்னடத்தை அடிப்படையில் ஆயுள் தண்டனை கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்ய வேண்டும் என்று ஏற்கனவே பல்வேறு கட்சிகளில் இருந்து கோரிக்கை வந்துள்ளது. 
 
இந்த கோரிக்கையை பரிசீலனை செய்த முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் ஓய்வுபெற்ற நீதிபதி ஆதிநாதன் என்பவர் தலைமையில் 6 பேர் கொண்ட குழு அமைத்துள்ளது.
 
இந்த குழு நன்னடத்தை அடிப்படையில் ஆயுள் தண்டனை கைதிகளை யார் யாரை விடுதலை செய்யலாம் என்பது குறித்து ஆய்வு செய்து அறிக்கை முதலமைச்சருக்கு அனுப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
இந்த அறிக்கையின் அடிப்படையில் நன்னடத்தை அடிப்படையில் ஆயுள் தண்டனை கைதிகள் சிலர் முன்கூட்டியே விடுதலை செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.