வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : சனி, 5 ஆகஸ்ட் 2023 (20:28 IST)

ஜல்லிக்கட்டு போட்டி நடப்பதற்கு காரணம் பிரதமர் மோடி- அண்ணாமலை

Annamalai
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின்  ''என் மண் என் மக்கள்'' என்ற பாதயாத்திரை நடந்து வருகிறது. ராமேஸ்வரத்தில் தொடங்கிய பயணம், சிவகங்கை,புதுக்கோட்டை மாவட்டங்களை தொடர்ந்து மதுரையில் நடைபெற்று வருகிறது.

இந்த பாதயாத்திரையின்  போது பேசிய அவர், காங்கிரஸ் ஆட்சியில் ஜல்லிக்கட்டுக்கு தடை இருந்தது. கடந்த  2009-10ல் . அப்போதைய அமைச்சர் ஜெய்ராம் ரமேஸ் ஜல்லிக்கட்டு காட்டுமிராண்டு விளையாட்டு என்றார்.

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடக்கிறது என்றால் அதற்கு காரணம் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசால்தான். இனி ஜல்லிக்கட்டுக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை ….அவர்தான் ஜல்லிக்கட்டு நாயகன் என்று கூறினார்.

மேலும், மகாத்மா காந்தி ரயிலில் வரும்போது, சோழவந்தானில் ஒரு விவசாயி குறைந்த ஆடையுடன் விவசாயம் செய்ததை பார்த்து, மதுரைக்குச் சென்ற அவர் இனிமேல் தானும் ஆடையைத் துறந்து பாதி ஆடையுடன்தான் இருக்கப்போகிறேன் என்று சிந்தனை வந்தது இந்த மண்ணில்தான்''  என்று கூறினார்.