திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : சனி, 27 ஜூலை 2024 (14:18 IST)

அரசுப் பணியில் அக்னி வீரர்களுக்கு இட ஒதுக்கீடு.! பாஜக ஆளும் மாநிலங்கள் அறிவிப்பு..!!

Agni Sodiers
ஓய்வுபெறும் அக்னிவீரர்களுக்கு தங்கள் மாநிலங்களில் அரசு பணியில் இட ஒதுக்கீடு வழங்கப்படும் என குஜராத், ஒடிசா உள்பட பாஜக ஆளும்  மாநிலங்கள் அறிவித்துள்ளன.   
 
கார்கில் போரில் பாகிஸ்தானை இந்தியா வென்றதன் 25வது ஆண்டு விழா நாட்டின் பல்வேறு பகுதிகளில் நேற்று கொண்டாடப்பட்டது. 
 
இதை முன்னிட்டு, ஓய்வுபெறும் அக்னிவீரர்களுக்கு தங்கள் மாநிலங்களில் அரசு பணியில் இட ஒதுக்கீடு வழங்கப்படும் என பாஜக ஆளும் குஜராத், ஒடிசா, சத்தீஸ்கர், உத்தரப்பிரதேசம், உத்தராகண்ட், மத்தியப் பிரதேசம், அருணாசலப் பிரதேசம் ஆகிய  மாநிலங்கள் அறிவித்துள்ளன.


சமீபத்தில் பாராளுமன்றத்தில் மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, உயிரிழந்த அக்னி வீரர்களுக்கு உரிய இழப்பீடும் வழங்கப்படுவதில்லை என்று குற்றம் சாட்டியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில்தான், அக்னிபாத் திட்டத்தை ஆதரிக்கும் விதமாக பாஜக ஆளும் மாநில முதல்வர்களும் இந்த முடிவை அறிவித்துள்ளனர்.