செவ்வாய், 4 மார்ச் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 4 மார்ச் 2025 (15:17 IST)

தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட் தருவதாக சொல்லவே இல்லை: எடப்பாடி பழனிசாமி அதிரடி விளக்கம்

கடந்த பாராளுமன்றத் தேர்தலின்போது, அதிமுக கூட்டணியில் தேமுதிக இடம் பெற்றிருந்தது. அப்போது, அந்தக் கட்சிக்கு ராஜ்யசபா சீட் வழங்கப்படும் என தகவல்கள் வெளியானது.
 
தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதாவும், "கூட்டணி ஒப்பந்தத்தின் போது, ராஜ்யசபா சீட் தருவதாக உறுதி அளிக்கப்பட்டது. எனவே, அந்த ஒப்பந்தத்தை நிறைவேற்ற வேண்டும்," என்று சமீபத்தில் கூறியிருந்தார்.
 
இந்த நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் செய்தியாளர்கள் இதுபற்றி கேள்வி எழுப்பியபோது, "நாங்கள் தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட் தருவதாக எப்போது கூறினோம்? இனிமேல் இந்த கேள்வியை என்னிடம் எழுப்ப வேண்டாம்," என்று தெளிவுபடுத்தினார்.
 
மேலும், அதிமுக-பாஜக கூட்டணி ஏற்படும் வாய்ப்பு குறித்து கேள்வியெழுப்பியதற்கு, "எங்களது ஒரே எதிரி திமுக மட்டுமே. வேறு எந்த கட்சியும் எங்களுக்குஎதிரி அல்ல. திமுகவை வீழ்த்துவதற்கான சரியான கூட்டணி அமைக்கப்படும். ஆறு மாதங்களுக்குப் பிறகு, எங்கள் கூட்டணியில் எந்தெந்த கட்சிகள் இருப்பதை தெரிவிப்போம்," என்று பதிலளித்தார்.
 
 
Edited by Mahendran