வியாழன், 2 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By anandakumar
Last Modified: சனி, 24 ஆகஸ்ட் 2019 (21:21 IST)

காவல் ஆய்வாளருக்கு ஜனாதிபதி விருதுக்கு பரிந்துரை...

போக்குவரத்து விபத்துகளில் ஏதேனும் உயிரிழப்புகள் நடைபெறாமல் இருக்க, உடனடியாக விபத்துகளில் இருந்து மக்களை காக்கும் கரூர் போக்குவரத்து காவல்துறை – ஆங்காங்கே விழிப்புணர்வு மற்றும் நூதன பிரச்சாரங்கள் தமிழக அளவில் விபத்துகளில் உயிரிழப்புகளை பெருமளவில் தவிர்த்த கரூர்  போக்குவரத்து காவல்துறையினரின் செய்தி தொகுப்பு
தமிழக அளவில் கரூர் என்றாலே, அரசியல் முதல் ஆன்மீகம் வரை அனைத்து துறைகளில் ஒரு மைல்கல்லை தாண்டி இருப்பது அனைவரும் அறிந்த நிலையில், தற்போது கரூர் போக்குவரத்து காவல்துறையினர் விபத்துகள் நடைபெற்றால், உடனடியாக போலீஸ், ஆம்புலன்ஸ், தீயணைப்புத்துறையினருக்கு தகவல் கொடுக்கவும், மேலும், ஆங்காங்கே விபத்துகள் நடந்தால் உடனடியாக தகவல் தருபவர்களுக்கு பாராட்டுகளும் தெரிவித்து வருவது தமிழக அளவில் கரூர் போக்குவரத்து காவல்துறையினர் தீவிரமாக களம் இறங்கி வருகின்றது.
 
கரூர் நகரில் 6 க்கும் மேற்பட்ட இடங்களில் கடும் விபத்துகள் ஏற்பட்டு வருகின்றது என்பதை கரூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் உத்திரவின் பேரில்., கரூர் நகர போக்குவரத்து காவல்துறையினர், ஆய்வாளர் மாரிமுத்து ஏற்பாட்டின் படி, உடனடியாக ஆங்காங்கே விழிப்புணர்வு நோட்டீஸ்களை ஏதோ, கண் துடைப்பிற்காக இல்லாமல், தினம் தினம் வித்யாச விதமாக போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் மாரிமுத்துவே, விநியோகித்து வருகின்றார். இது மட்டுமில்லாமல், அந்த விபத்துகள் ஏற்படும் இடத்தில் வானுயர போர்டுகளை வைத்து, அந்த போர்டில் விபத்துகள் ஏற்பட்டால், உடனே ஆம்புலன்ஸ் ஊர்த்திக்கும் மருத்துவமனைக்கும் தெரிவிக்க ஆங்காங்கே செல்போன் எண்கள் மற்றும் தொலைபேசி எண்களும் பொதுமக்களுக்கு அறிமுகப்படுத்தியதோடு, அவர்களிடையே விபத்து நடந்தால் உடனே பொதுமக்களை காப்பாற்ற, துரித நடவடிக்கை மேற்கொள்ளவும் எந்த ஒரு உயிரும் இறக்காமல் காப்பாற்றவே இது போல நடவடிக்கை ஒரு பகுதியாக ஆங்காங்கே பிளக்ஸ் போர்டுகள், மற்றும் வானுயர தொங்கும் போர்டுகள் அது மட்டுமில்லாமல் ஆங்காங்கே விபத்துகள் குறித்த தகவல் தெரிவிக்க, உடனடியாக தெரிவிப்போருக்கு பாராட்டுகள், குறிப்பாக ஆட்டோ டிரைவர்கள் தான் அதிக அளவில் தகவல் அளிப்பதால் அவர்களை தேடிப்போய் கெளரவிக்கும் போக்குவரத்து காவல்துறை இப்படி பல்வேறு விஷயங்களில் கரூர் போக்குவரத்து காவல்துறை முதலிடம் வகிக்கும் நிலையில், தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், தொகுதி என்பதினால் காவல்துறையும், போக்குவரத்து காவல்துறையும் துறை ரீதியாக கூடுதல் கவனம் செலுத்தி வருகின்றது என்றால் அது மிகையாகாது. அதுமட்டுமில்லாமல், காலை மாலை என்று தலைகவசம், சீட் பெல்ட் போடுவது குறித்த விழிப்புணர்வு நோட்டீஸ்களை நாள், நட்சத்திரம் பார்க்காமல் தினந்தோறும் வெளியிட்டு வரும் போக்குவரத்து காவல்துறையினரால் கரூர் மாவட்டத்தில் விபத்துகள் அதிகம் ஏற்பட்டாலும், உயிரிழப்புகள் கணிசமான அளவு தான், அந்த அளவிற்கு விபத்துகளில் இருந்து மக்களை காக்க, கரூர் போக்குவரத்து காவல்துறையினர் மும்முரம் காட்டுவதினால், தான், தமிழக அளவில்., பல்வேறு விருதுகள் பெற்ற., கரூர் போக்குவரத்து காவல் ஆய்வாளர் மாரிமுத்து அவர்கள், ஜனாதிபதி விருதுக்கு தமிழக காவல்துறையினால் பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.