தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி இடமாற்றத்திற்கு ஜனாதிபதி ஒப்புதல்!
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜியை இடமாற்றம் செய்ய ஜனாதிபதி ஒப்புதல் அளித்துள்ளார்.
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சய் பானர்ஜி சில நாட்களுக்கு முன்னர் மேகலாயா உயர்நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டார். மேலும் அவரது இடத்தில் உயர்நீதிமன்ற நீதிபதி முனீஷ்வர் நாத் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்திற்கு தலைமை நீதிபதியாக மாற்றங்களும் கொலீஜியம் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உயர் நீதிமன்ற வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சஞ்சீப் பானர்ஜி இடமாற்றம் செய்வதை வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் போராட்டம் நடத்தி வந்தனர். கொலிஜியம் அறிவித்த இந்த முடிவை மறுபரிசீலனை செய்யவேண்டும் என மூத்த வழக்கறிஞர்கள் எதிர்ப்பு தெரிவித்து அமைதி போராட்டம் நடத்தி வந்தனர்.
இந்நிலையில் சற்றுமுன் மேகாலயா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக சஞ்சீப் பானர்ஜியை நியமிக்க குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார். இதையடுத்து மேகாலயா உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக சஞ்சீப் பானர்ஜி விரைவில் பதவி ஏற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.