திமுக ஒரு தில்லுமுல்லு கட்சி: பிரேமலதா விஜயகாந்த் ஆவேச பேச்சு
திமுக ஒருவர் தில்லுமுல்லு கட்சி என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் ஆவேசமாக பேசியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
விழுப்புரம் பழைய பேருந்து நிலையம் அருகே தேமுதிக சார்பில் நலத்திட்ட விழா .இதில் பேசிய பிரேமலதா விஜயகாந்த், தேமுதிக தலைவர் விஜயகாந்த் தன்னுடைய வாழ்க்கையை மக்களுக்காக அர்ப்பணித்தவர் என்று தெரிவித்தார்
மேலும் திமுக ஒரு தில்லுமுல்லு கட்சி என்றும் தமிழகத்தில் கூட்டணி அமைக்காமல் பணம் கொடுக்காமல் தேர்தலில் திமுகவால் வெற்றி பெற முடியுமா என்றும் கேள்வி எழுப்பினார்
தேமுதிக தனித்து போட்டியிட தயாராக உள்ளது என்றும் எங்களை போன்ற மற்ற கட்சிகள் தனித்து போட்டியிட தயாரா என்றும் அவர் சவால் விடுத்தார்
முதல்வர் மு க ஸ்டாலின் உண்மையிலேயே உத்தமராக இருந்தால் அவர் தங்களது அமைச்சரின் வீட்டில் ரெய்டு செய்யட்டும் என்றும் அவர் தெரிவித்தார்