ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 14 டிசம்பர் 2023 (12:39 IST)

தேமுதிக பொதுசெயலாளராக பிரேமலதா விஜயகாந்த்! – பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம்!

DMDK
தேமுதிக பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற்று வரும் நிலையில் கட்சி பொதுச்செயலாளராக பிரேமலதா விஜயகாந்த் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.



நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழக அரசியல் கட்சிகள் தேர்தலுக்கு தயாராகி வருகின்றன. தேமுதிகவும் நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள தயாராகி வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நல குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இன்று தேமுதிக பொதுக்குழு கூட்டம் தொடங்கிய நிலையில் விஜயகாந்த் நீண்ட காலம் கழித்து தொண்டர்கள் முன் தோன்றினார். மேலும் நடைபெற்று வரும் பொதுக்குழு கூட்டத்தில் தேமுதிக கட்சியின் பொதுசெயலாளராக பிரேமலதா விஜயகாந்த் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

எனினும் நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி, இதர விவகாரங்கள் குறித்து விஜயகாந்த் முடிவுகளை மேற்கொள்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த பொதுசெயலாளர் ,மாற்றத்தால் கட்சியில் எந்த விதமான மாற்றங்கள், வளர்ச்சிகள் ஏற்படும் என தேமுதிக தொண்டர்கள் காத்திருக்கின்றனர்.

Edit by Prasanth.K