வந்தது தளர்வுகள்; கூடுகிறது தண்டனைகள்: தமிழக அரசு அதிரடி!!
கொரோனா கட்டுப்பாடுகளை மதிக்கதாவர்கள் மீதான தண்டனையை மேலும் கடுமையாக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு உத்தரவு தமிழகம் முழுவதும் பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இருப்பினும் கடந்த இரண்டு மாதங்களாக ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. குறிப்பாக பேருந்து போக்குவரத்து மாவட்டங்களுக்கு இடையே தொடங்கப்பட்டது.
இந்நிலையில் தமிழகத்தில் இம்முறை அதிக தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளதால் கொரோனா கட்டுப்பாடுகளை பலர் பின்பற்றாத சூழலில் விதிகளை மீறுபவர்கள் மீது பேரிடர் மேலாண்மை சட்டம், பொது சுகாதார சட்டம் ஆகியவற்றின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இதனிடையே இந்த விதிகளை மேலும் கடுமையாக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. ஆளுநரின் ஒப்புதல் மூலம் இந்த கடுமையான நடவடிக்கைகள் ஓரிரு நாளில் அமலுக்கு வரும் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.