புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By anandakumar
Last Modified: திங்கள், 30 செப்டம்பர் 2019 (21:28 IST)

பாட்டு பாடி கர்ப்பிணிகளை உற்சாகமடைய செய்தமாவட்ட வருவாய் அலுவலர்

சமுதாய வளைகாப்பில் அம்மா என்றழைக்காத உயிரில்லையே என்று பாட்டு பாடி கர்ப்பிணிகளை உற்சாகமடைய செய்தார்  கரூர் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேந்திரன்.இதனைத்தொடர்ந்து , கர்ப்பிணி பெண்கள் கருவில் வளரக்கூடிய சிசு நன்கு வளரக்கூடிய அளவிற்கு கூட நல்ல பல திட்டங்களை தந்தவர் தான் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா – கரூரில் தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் சமுதாய வளைகாப்பில் பேசினார்.

கரூரில் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி கோவை சாலையில் உள்ள வி.என்.சி மஹாலில் கரூர் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் சிறப்புரையாற்றி, கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு கரூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நடத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், கர்ப்பிணி பெண்கள் வயிற்றில் வளரும் கரு நன்றாக வளரவேண்டுமென்றும், ஊட்டச்சத்து குறைபாடில்லாமல் வளமான திட்டங்களை கொடுத்தவர் தான் முன்னாள் மறைந்த முதல்வர் ஜெயலலிதா என்றதோடு, தற்போது தமிழக அளவில் ஆண்ராய்டு செல்போன் அங்கன்வாடி ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், குழந்தைகளின் நலனை பேணி காக்க வேண்டுமென்றும், தகவல்களை உடனடியாக பரிமாறிக் கொள்ள வேண்டுமென்றும் எண்ணி எண்ணி திட்டங்களை கொடுத்த அரசு தான் இந்த அரசு, என்றும், அதே போல் பெண்களுக்கான திட்டங்கள் கொடுத்து கர்ப்பிணி பெண்களுக்கு ரூ 18 ஆயிரம் கொடுத்தும், அந்த கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு நடத்தி குழந்தை பிறந்தால் அவர்களுக்கு பரிசுப்பொட்டிகளும் கொடுத்து, அந்த தாயையும், சேயையும் வீட்டில் கொண்டு போய் விடும் வரை அனைத்து திட்டங்களையும் கொடுத்தவர் தான் புரட்சித்தலைவி அம்மா என்றார். அவர் வழியிலேயே தற்போதைய எடப்பாடி பழனிச்சாமி அரசு ஏராளமான திட்டங்களை செய்து வருகின்றது என்றார்.

முன்னதாக, நிகழ்ச்சியில் தலைமை வகித்த, மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேந்திரன் பேசும் போது, அம்மா என்றழைக்காத உயிரில்லையே, அம்மாவை வணங்காத உயிரில்லையே என்று பாட்டு பாடி கர்ப்பிணி பெண்களை உற்சாகப்படுத்தினார். இந்நிகழ்ச்சியில் கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் கீதா மணிவண்ணன், நகர செயலாளர்கள் கரூர் வை.நெடுஞ்செழியன், தாந்தோன்றி வி.சி.கே.ஜெயராஜ், வெங்கமேடு பாண்டியன், கரூர் மாவட்ட அவைத்தலைவரும், திருச்சிராப்பள்ளி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவருமான ஏ.ஆர்.காளியப்பன், கரூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் மதுசுதன், அரவக்குறிச்சி கலையரசன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.