வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Arun Prasath
Last Modified: திங்கள், 30 செப்டம்பர் 2019 (16:17 IST)

இடைத்தேர்தலில் அதிமுகவிற்கு ஆதரவு தரவேண்டும்: பிரதமரிடம் முதல்வர் கோரிக்கை

இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர்களுக்கு ஆதரவு தரவேண்டும் என பிரதமர் மோடியிடம் தமிழக முதல்வர் பழனிசாமி கோரிக்கை வைத்துள்ளார்.

விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி ஆகிய தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், நாங்குநேரி தொகுதியில் வெ.நாராயணன் மற்றும் விக்கிரவாண்டியில் எம்.ஆர்.முத்தமிழ்செல்வன் ஆகியோர் அதிமுக சார்பாக வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று சென்னைக்கு வருகை தந்த பிரதமர் மோடியை சந்தித்த முதல்வர் பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர், இடைத்தேர்தலில் அதிமுகவிற்கு ஆதரவு தரவேண்டும் என கோரிக்கை வைத்தனர். மேலும் அதிமுக சார்பாக பாஜகவினரை பரப்புரை செய்ய வருமாறும் வேண்டுகோள் விடுத்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.