வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 21 அக்டோபர் 2022 (11:06 IST)

உயிருக்கே உலை வைத்த ஆம்புலன்ஸ்! டெலிவரிக்கு சென்ற தாய், சேய் பலி!

சிவகங்கையில் பிரசவத்திற்கு ஆம்புலன்ஸில் சென்ற பெண், ஆம்புலன்ஸ் மரத்தில் மோதியதால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி பகுதியை சேர்ந்தவர் குமரேசன். இவருக்கு சமீபத்தில் திருமணம் நடந்து முடிந்த நிலையில் அவரது மனைவி நிவேதா கர்ப்பமாக இருந்தார். இந்நிலையில் அவருக்கு இன்று அதிகாலை பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.

இதனால் 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு அதில் நிவேதா மற்றும் அவரது தாயார் விஜயலெட்சுமி ஆகியோர் மருத்துவமனை சென்றுள்ளனர். ஆம்புலன்ஸ் செங்குளம் பகுதியில் சென்றுக் கொண்டிருந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்து அங்கிருந்த மரம் ஒன்றில் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது.


இந்த விபத்தில் நிவேதாவும் அவரது தாய் விஜயலெட்சுமியும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஆம்புலன்ஸ் டிரைவரும், மருத்துவ உதவியாளரும் படுகாயம் அடைந்துள்ளனர்.

உடனடியாக அப்பகுதி மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அவர்களை மீட்டு மருத்துவமனை அனுப்பி வைத்துள்ளனர். சம்பவ இடம் விரைந்த போலீஸார் இறந்தவர்கள் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பிரசவத்திற்காக சென்ற பெண் சேயுடன் பலியாகியுள்ள சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Edited By: Prasanth.K