திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : புதன், 12 ஜூன் 2024 (13:49 IST)

அண்ணாமலை தான் தலைவர், மாற்றம் இல்லை.. அதிருப்தியாளர்களுக்கு பாஜக தலைமை பதிலடி..!

Annamalai
நடைபெற்று முடிந்த பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் பாஜக ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை என்ற காரணத்தை காட்டி தமிழக பாஜக தலைவரை மாற்ற வேண்டும் என்று சில சீனியர் தலைவர்கள் டெல்லியில் உள்ள தலைமையகத்தில் புகார் அளித்ததாக கூறப்படுகிறது.
 
மீண்டும் தமிழிசை சௌந்தர்ராஜன் அல்லது பொன் ராதாகிருஷ்ணன் ஆகியவர்களை தமிழக பாஜக தலைவராக மாற்ற வேண்டும் என்றும் அண்ணாமலை சீனியர்களை மதிப்பதில்லை என்றும் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. 
 
ஆனால் பாஜக தலைமை தமிழகத்தில் இப்போதைக்கு தலைவர் பதவி மாற்றமில்லை என்றும் அவருடன் ஒருங்கிணைந்து பணியாற்றங்கள் என்றும் டெல்லி தலைமை கட் அண்ட் டைட்டாக சொல்லிவிட்டதாகவும் இதனால் புகார் அளிக்க சென்ற சீனியர் தலைவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி வந்ததாகவும் கூறப்படுகிறது.
 
2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் வரை அண்ணாமலை தான் தமிழக பாஜக தலைவர் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் பாஜக வட்டாரங்கள் கூறுகின்றன.
 
Edited by Siva