ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 12 ஜூன் 2024 (12:48 IST)

விக்கிரவாண்டி எனக்குதான்..! அமமுக, பாமக இடையே போட்டி! விழி பிதுங்கும் பாஜக! – உடைகிறதா கூட்டணி!

PMK AMMK
தமிழ்நாட்டில் விக்கிரவாண்டி தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அதில் போட்டியிட பாமக, அமமுக இடையே போட்டி நிலவுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.



விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதியில் ஜூலை 10ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் ஜூன் 14ம் தேதி தொடங்கி 21ம் தேதி முடிவடைகிறது. இந்த தேர்தலில் திமுக கூட்டணியிலிருந்து திமுக வேட்பாளராக அன்னியூர் சிவா அறிவிக்கப்பட்டுள்ளார். நாம் தமிழர் கட்சி தற்போது மாநில அந்தஸ்து பெற்றுள்ள நிலையில் இந்த இடைத்தேர்தலிலும் தனித்து போட்டியிட உள்ளது.

ஆனால் பாஜக கூட்டணியில் போட்டியிடுவது யார் என்பதில் போட்டி நிலவுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாமக போட்டியிட விரும்பும் நிலையில், அதே கூட்டணியில் உள்ள அமமுகவும் போட்டியிட விருப்பம் தெரிவிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால் இரு கட்சிகளில் யாரை போட்டியிட அனுமதிப்பது என்பதில் பாஜக தலைமையும் குழப்பத்தில் உள்ளதாம்.

முன்னதாக 2019ல் பாஜகவுடன் கூட்டணியில் இருந்த பாமக உள்ளாட்சி தேர்தல் என வந்தபோது தனித்து சென்று போட்டியிட்டது. இந்நிலையில் விக்கிரவாண்டியில் போட்டியிட அனுமதிக்காவிட்டால் பாமக மீண்டும் கூட்டணியிலிருந்து விலக வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் தமிழக பாஜக கூட்டணியில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.

Edit by Prasanth.K