1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. youth killed in kanniyakumari in one side love

லவ் டார்ச்சர்!.. இளம்பெண் தற்கொலை!.. வாலிபர் கல்லால் அடித்துக் கொலை!..

suicide
ஒரு தலைக்காதல் தொடர்பாக தற்கொலைகளும், கொலைகளும் நடக்கும் சம்பவங்கள் இப்போதும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. இந்நிலையில்தான் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒருதலைக் காதல் டார்ச்சர் தாங்க முடியாமல் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

கன்னியாகுமரி மாவட்டம் கொட்டாரம் அருகே உள்ள பெரியவிளையை சேர்ந்தவர் ஏஞ்சல். இவரை அதே பகுதியை சேர்ந்த ஆண்டனி ராஜ் என்பவர் ஒருதலை பட்சமாக காதலித்து வந்துள்ளார்.. மேலும் தன்னை காதலிக்குமாறு அடிக்கடி ஏஞ்சலை சந்தித்து அவர் வற்புறுத்தியதாக சொல்லப்படுகிறது..

இதையடுத்து ஏஞ்சலின் தந்தை கடந்த மே மாதம் காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன் அடிப்படையில் ஆண்டனி ராஜ் கைது செய்யப்பட்டார். சிறையில் இருந்து வெளியே வந்த பிறகும் மீண்டும் ஏஞ்சலுக்கு லவ் டார்ச்சர் கொடுத்துள்ளார். இதனால் மனமுடைந்த ஏஞ்சல் வீட்டில் யாரும் இல்லாத போது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அப்போது அவரின் வீட்டுக்கு துக்கம் விசாரிக்க ஆண்டனி ராஜ் வந்ததாக சொல்லப்படுகிறது. அவரைப் பார்த்து ஆத்திரமடைந்த ஏஞ்சலின் உறவினர்கள் அவரை கல்லாலும், கட்டையாலும் தாக்கி கொலை செய்துள்ளனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்..
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
முதல்வர் விஜய் ஆங்கில உச்சரிப்பை கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன்: ப சிதம்பரம்