1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. mk stalin comment against pattinappakkam plan

தலைமை செயலகம் கட்டுங்கன்னு ஜோசியர் சொன்னாரா?.. விஜயை கலாய்க்கும் ஸ்டாலின்!..

mk stalin
சென்னை மெரினா கடற்கரை அருகே அமைந்துள்ள தலைமைச் செயலகத்தை வசதி சரியாக இல்லை எனக்கூறி பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலக கட்டிடத்தை அமைக்கும் பணியில் தமிழக அரசு ஈடுபட்டிருக்கிறது. ஆனால் இதற்கு திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன..

அங்கே தலைமைச் செயலகம் கட்டினால் அங்குள்ள மீனவர்களின் வாழ்க்கை பாதிக்கப்படும் என அவர்கள் தொடர்ந்து கூறி வருகிறார்கள். ஆனால் சமீபத்தில் இது தொடர்பாக விளக்கமளித்த அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்டுவதை முதலமைச்சர் விஜய் இன்னும் உறுதி செய்யவில்லை என்று கூறியிருந்தார்.

இந்நிலையில், இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள திமுக தலைவர் ஸ்டாலின் ‘கடற்கரையை பார்த்தபடி முதல்வர் அலுவலகம் அமையனும் என ஜோதிடர் சொன்னதாலயே பட்டினப்பாக்கத்தை தேர்ந்தெடுப்பதாக செய்திகள் வருகின்றன.. தலைமைச் செயலகம் கட்ட எத்தனையோ இடங்கள் இருக்கின்றன.. ஏற்கனவே கலைஞர் ஆட்சியில் கட்டப்பட்ட ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகமும் இருக்கிறது.. வேண்டுமென்றால் அங்கே செயல்பட்டு வரும் மருத்துவமனையை வேறு இடத்துக்கு மாற்றி விட்டு மீண்டும் அதை தலைமை செயலகமாக பயன்படுத்தலாம்..

பட்டினப்பாக்கத்தில் யார் சொல்லி அமைகிறது புதிய தலைமைச் செயலகம்? அரசாணை வெளியிட்டுவிட்டு இன்னும் முடிவு செய்யவில்லை எனப் பேசுவது யாரை ஏமாற்ற? முதலமைச்சர் தனது வேலையைப் பார்க்கத்தான் தலைமைச் செயலகம்; கடலைப் பார்ப்பதற்கல்ல!

மீனவர்களின் வாழ்விடத்தையும் வாழ்வாதாரத்தையும் அழித்துவிட்டு, போக்குவரத்து நெரிசல் மிக்க இடத்தில் அமையும் தலைமைச் செயலகம் வேண்டாம்! ஆட்சி அமைய ஆதரவளித்த கட்சிகளே போராட்டம் நடத்தியும் அரசாணையைத் திரும்பப் பெறாத த.வெ.க. அரசின் ஆணவத்தை அடக்குவோம். மீனவச் சகோதரர்களின் போராட்டத்துக்குத் தி.மு.கழகம் துணைநிற்கும்’ என அதில் கூறியிருக்கிறார்.
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
தவெக ஆட்சியில் இரண்டு வெட்டுக்குதான் போட்டியே!.. முக ஸ்டாலின் விளாசல்!...