1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. thirumavalavan talk about by election result

மக்கள் கோபத்தில் இருந்தா ஓட்டு போட மாட்டாங்க!.. தவெகவை டென்ஷனாக்கிய திருமா...

thiruma vijay
2026 சட்டமன்ற தேர்தலில் நடிகர் விஜய் தொடங்கிய தமிழக வெற்றிக் கழகம் எந்த கட்சிகளிடனும் கூட்டணி அமைக்காமல் தனித்துப் போட்டியிட்டு 108 தொகுதிகளில் வெற்றி பெற்றது. மேலும் ஆட்சியமைக்க மேலும் 8 எம்.எல்.ஏக்களின் ஆதரவு தேவைப்பட்டபோது திமுக கூட்டணியில் இருந்த விடுதலை சிறுத்தை, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் மற்றும் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் தவெகவுக்கு ஆதரவு கொடுத்தன. இதையடுத்து தவெக ஆட்சி தற்போது அமைந்திருக்கிறது.

ஒருபக்கம், வருகிற அக்டோபர் 6ம் தேதி தாராபுரம் மற்றும் மதுராந்தகம் இரண்டு தொகுதிகளிலும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஏற்கனவே அந்த இரண்டு தொகுதிகளில் அதிமுக சார்பில் போட்ட்டியிட்டு வெற்றி பெற்றுவிட்டு எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தவர்களுக்கு மீண்டும் அதே தொகுதியில் தவெக வாய்ப்பளித்திருக்கிறது.

எனவே அந்த இரண்டு தொகுதிகளிலும் தவெஎக வெற்றி பெறுமா என்கிற கேள்வி எழுந்திருக்கிறது. இந்நிலையில், இது தொடர்பாக செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த திருமாவளவன் ‘பதவி விலகி மீண்டும் போட்டியிடும் வேட்பாளர்கள் மீது அந்த தொகுதி மக்களுக்கு அதிருப்தியும்,எதிர்ப்பும் இருந்தால் மக்கள் நிச்சயம் அதற்கான தீர்ப்பு தருவார்கள்.. இடைத்தேர்தல் முடிவு வரும் வரை பொறுத்திருந்து பார்ப்போம்’ என்று கூறியிருக்கிறார்.
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
ஒரே சார்ஜில் 3 நாள் பயன்படுத்தலாம்.. ஒன்ப்ளஸ் அறிமுகம் செய்த என்6 லைட் ஸ்மார்ட்போன்..