1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வியாழன், 2 மார்ச் 2023 (08:21 IST)

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் முன்னிலை!

ilangovan
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வாக்கு எண்ணிக்கை தற்போது நடைபெற்று வரும் நிலையில் தபால் வாக்கு எண்ணிக்கையில் காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவன் முன்னிலை வகிப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் கடந்த பிப்ரவரி 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடந்தது என்பதும் இந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவன் மற்றும் அதிமுக வேட்பாளர் தென்னரசு ஆகிய இருவருக்கும் இடையே கடும் போட்டி இருந்தது என்பதையும் ஏற்கனவே பார்த்தோம் . இந்த நிலையில் பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன. கடும் பாதுகாப்புக்கு மத்தியில் அரசியல் கட்சிகளின் முகவர்கள் பார்வையில் இந்த வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. 
 
இந்த நிலையில் சற்று முன் தபால் வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில் அதில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் முன்னிலை வகித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 
 
இன்று காலை எட்டு முப்பது மணி முதல் பதிவான வாக்குகள் எண்ணப்படும் என்று கூறப்படுகிறது.
 
Edited by Siva