திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 27 பிப்ரவரி 2023 (15:19 IST)

ஈரோடு கிழக்கு தொகுதியில் பணநாயகம் தான் வெல்லும்: பாஜக எம்.எல்.ஏ கருத்து..!

saraswathi
ஈரோடு கிழக்கு தொகுதியில் பணநாயகம் தான் வெல்லும்: பாஜக எம்.எல்.ஏ கருத்து..!
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் யார் வெற்றி பெற்றாலும் அது பணநாயகம் வெற்றி பெற்றதாகத்தான் அர்த்தம் என பாஜக எம்எல்ஏ சரஸ்வதி கூறியுள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதியில் உள்ள சிஎஸ்ஐ பள்ளியில் இன்று  மொடக்குறிச்சி எம்எல்ஏ சரஸ்வதி வாக்களித்தார். அதன் பிறகு அவர் செய்தியாளர்களின் பேசிய போது 'ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் யார் வெற்றி பெற்றாலும் பணநாயகம் வென்றதாகவே கருதப்படும் என்றும் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் முறையாக நடத்தப்படவில்லை என்றும் தெரிவித்தார். பணம் அளிக்காமல் வாக்களிப்பதற்கான மனநிலைக்கு மக்கள் மாற வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். 
 
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பணம் மற்றும் பரிசு பொருட்களை திமுகவினர் கொடுப்பதாக அதிமுகவினர் குற்றம் தாண்டி வரும் நிலையில் அதிமுகவினர்களும் பணம் கொடுப்பதாக ஒரு சில குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது
 
இதனை அடுத்து யார் வெற்றி பெற்றாலும் அங்கு பணநாயகம் வென்றதாக கருதப்படும் என மொடக்குறிச்சி தொகுதி பாஜக எம்எல்ஏ சரஸ்வதி தெரிவித்துள்ளார்
 
Edited by Mahendran