ஞாயிறு, 1 பிப்ரவரி 2026
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: வியாழன், 20 ஜூலை 2017 (17:19 IST)

தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட பிரபல திருடி கைது!

தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட பிரபல திருடி கைது!

தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட பிரபல திருடி கைது!
சென்னையில் தொடர் வழிப்பறி கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வந்த பிரபல திருடி சாந்தி வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டுள்ளார்.


 
 
சென்னை தி.நகர் கண்ணம்மாபேட்டையை சேர்ந்த கலைமணி என்பவர் கடந்த திங்கள் கிழமை நடந்து சென்று கொண்டிருந்தபோது அந்த பகுதியில் பெண் ஒருவர் ஸ்கூட்டரில் வந்து அவரிடம் முகவரி கேட்பது போல நடித்து அவரது மணிபர்ஸை பறித்துக்கொண்டு தப்பித்துள்ளார்.
 
இதனையடுத்து பாதிக்கப்பட்ட அந்த நபர் அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அவர்கள் வழக்கு பதிவு செய்து அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான வீடியோக்களை பெற்று ஆய்வு செய்தனர்.
 
இந்த ஆய்வில் பல்வேறு தொடர் வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்டு வந்த மாம்பலத்தை சேர்ந்த சாந்தி என்பவர் தான் இந்த திருட்டையும் செய்தது என்பது தெரியவந்தது. இதனையடுத்து சாந்தியை போலீசார் கைது செய்தனர்.