திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Arun Prasath
Last Updated : புதன், 27 நவம்பர் 2019 (17:14 IST)

நாளை மறுநாள் ரேஷன் கடைக்கு வரவும், பொங்கல் பரிசு காத்திருக்கிறது…

நாளை மறுநாள் 1000 ரூபாய் பொங்கல் பரிசு ரேஷன் கடைகளில் விநியோகம் செய்யப்படுகிறது.

பொங்கல் பண்டிகையை ஒட்டி இந்த ஆண்டு அரிசி ரேஷன் கார்டுகளுக்கு தலா 1000 ரூபாயும் பரிசு தொகையும் வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி அறிவித்த நிலையில், தமிழக அரசு ரூ.2363.13 கோடி ஒதுக்கியது.

இந்நிலையில் நாளை மறுநாள் (நவம்பர் 29) சென்னை தலைமைச் செயலகத்தில் இத்திட்டத்தை தொடங்கிவைக்கவுள்ளார் எடப்பாடி பழனிசாமி. ரேஷன் கடைகளில் அரிசி ரேஷன் கார்டு வைத்திருக்கும் குடும்பத்திற்கு ரூ.1000 ரொக்கப்பணத்துடன் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சக்கரை, கரும்பு, முந்திரி, திராட்சை, ஏழைக்காய் ஆகிய பொருட்கள் வழங்கப்படுகின்றன.